கறம்பக்குடியில் அரசு பள்ளி ஆண்டு விழா


கறம்பக்குடியில் அரசு பள்ளி ஆண்டு விழா
x
தினத்தந்தி 15 May 2022 6:36 PM GMT (Updated: 2022-05-16T00:06:33+05:30)

அரசு பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

கறம்பக்குடி:
கறம்பக்குடி அனுமார் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மாலையில் மாணவ-மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள், சமூக விழிப்புணர்வு நாடகங்கள் நடைபெற்றன. விழாவில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், கல்வி ஆர்வலர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

Next Story