அரசு கல்லூரி அமைக்க வனத்துறைக்கு ரூ.4¾ லட்சம் இழப்பீடு


அரசு கல்லூரி அமைக்க வனத்துறைக்கு ரூ.4¾ லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 16 May 2022 12:16 AM IST (Updated: 16 May 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டத்தில் அரசு கல்லூரி அமைக்க வனத்துறைக்கு ரூ.4¾ லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

ஜெயங்கொண்டம், 
ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி துறை பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் கலைசெல்வி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டு அரசு கல்லூரி அமைப்பதற்கு வனத்துறைக்கு சொந்தமான வன தோட்ட கழகத்திற்கு கல்லூரி செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகை ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 268-ஐ தனது சொந்த பணத்தில் இருந்து வழங்கினார். கூட்டத்தில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் சங்க தலைவர் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Next Story