செந்துறை-ஆண்டிமடம் ஒன்றியங்களில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு


செந்துறை-ஆண்டிமடம் ஒன்றியங்களில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 May 2022 12:25 AM IST (Updated: 16 May 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை-ஆண்டிமடம் ஒன்றியங்களில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து உள்ளது.

அரியலூர், 
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா குவாகம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் ரமணசரஸ்வதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம், செந்துறை ஒன்றியங்களில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகிறது. அதனை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளை 18 வயது நிறைவடைந்த பிறகே திருமணம் செய்து கொடுக்க வேண்டும். அதேபோன்று ஆண்களும் 21 வயது நிறைவடைந்த பிறகே திருமணம் செய்து கொள்ள வேண்டும். குழந்தை திருமணம் செய்வதால் சட்டப்படியான நடவடிக்கைககள் மூலம் 2 குடும்பமும் பாதிக்கப்படுகிறது. எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு சரியான வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும், என்றார்.

Next Story