போதைப்பொருள் விற்ற 3 பேர் கைது


போதைப்பொருள் விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 May 2022 12:31 AM IST (Updated: 16 May 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் போதைப்பொருள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் நேற்று பாளையங்கோட்டை ஐகிரவுண்டு பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் பெருமாள்புரம் அன்புநகர் பகுதியை சேர்ந்த முருகையா (வயது 44), வடக்கு விஜயநாராயணம் பகுதியை சேர்ந்த பூலையா (44), சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த திருமலைக்குமார் (42) ஆகியோர் என்பதும், அவர்கள் மருத்துவ துறையில் பயன்படுத்தப்படும் ஒரு வகை திரவத்தை எலுமிச்சை பழச்சாற்றில் கலந்து போதை திரவமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் முருகையா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 8 பாட்டில் போதை திரவத்தை பறிமுதல் செய்தனர். இதில் முருகையா பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story