கீரணிப்பட்டியில் கபடி போட்டி
கீரணிப்பட்டியில் கபடி போட்டி நடைபெற்றது.
அரிமளம்:
அரிமளம் ஒன்றியம், கீரணிப்பட்டி கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 65 கிலோ எடை பிரிவிற்கான கபடி போட்டி நடைபெற்றது. இதில் 17 அணிகள் கலந்து கொண்டன. இந்த கபடி போட்டியில் முதல் பரிசு ரூ.20 ஆயிரத்து 1-ஐ அரிமளம் கபடி அணியினரும், 2-ம் பரிசு ரூ.15 ஆயிரத்து 1-ஐ போசம்பட்டி கபடி அணியினரும், 3-ம் பரிசு ரூ.12 ஆயிரத்து 1-ஐ மீனிகந்தா கபடி அணியினரும், நான்காம் பரிசு ரூ.8 ஆயிரத்து 1-ஐ அகரப்பட்டி கபடி அணியினரும் பெற்றனர். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கி பாராட்டினார். போட்டிக்கான ஏற்பாடுகளை கீரணிப்பட்டி பொதுமக்கள் மற்றும் அம்பலகாரர்கள், இளைஞர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story