நெல்லையில் காமராஜர், இந்திரா காந்தி வெண்கல சிலைகள் திறப்பு; தனுஷ்கோடி ஆதித்தன் பேட்டி


நெல்லையில் காமராஜர், இந்திரா காந்தி வெண்கல சிலைகள் திறப்பு; தனுஷ்கோடி ஆதித்தன் பேட்டி
x

நெல்லையில் காமராஜர், இந்திரா காந்தி வெண்கல சிலைகள் இன்று திறக்கப்படுகிறது என்று முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கூறினார்.

நெல்லை:
நெல்லையில் காமராஜர், இந்திரா காந்தி வெண்கல சிலைகள் இன்று திறக்கப்படுகிறது என்று முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கூறினார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

காமராஜர், இந்திரா காந்தி வெண்கல சிலைகள்
நெல்லை காங்கிரஸ் அலுவலகமான செல்லப்பாண்டியன் பவன் முன்பு காமராஜர் மற்றும் இந்திராகாந்தி சிலைகள் கடந்த 30 ஆண்டுகளாக உள்ளது. தற்போது அந்த தலைவர்கள் சிலைகளின் பீடத்தை உயர்த்தி, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களோடு வெண்கல சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைவர்களின் புதிய வெண்கல சிலைகள் திறப்பு விழா இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. காமராஜர் சிலையை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைக்கிறார். இந்திரா காந்தி சிலையை கனிமொழி எம்.பி. திறந்து வைக்கிறார்.

பங்கேற்பாளர்கள்
விழாவில் முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஞானதிரவியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
விழாவுக்கு நான் (தனுஷ்கோடி ஆதித்தன்) தலைமை தாங்குகிறேன். மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் வரவேற்று பேசுகிறார். விழாவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள். சிங்கப்பூர் தொழிலதிபர் மகா கிப்ட்சன் உள்ளிட்டோர் காமராஜர் சிலையை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், சிலை அமைப்புக்குழு பொருளாளர் டியூக் துரைராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story