திருப்பரங்குன்றம் கோவிலில் ஒரே நாளில் 80 ஜோடிகளுக்கு திருமணம்


திருப்பரங்குன்றம் கோவிலில் ஒரே நாளில் 80 ஜோடிகளுக்கு திருமணம்
x
தினத்தந்தி 15 May 2022 7:28 PM GMT (Updated: 15 May 2022 7:28 PM GMT)

வைகாசி மாத முதல்நாள் முகூர்த்தத்தையொட்டி திருப்பரங்குன்றம் கோவிலில் ஒரே நாளில் 80 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

திருப்பரங்குன்றம்,

வைகாசி மாத முதல்நாள் முகூர்த்தத்தையொட்டி திருப்பரங்குன்றம் கோவிலில் ஒரே நாளில் 80 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

திருப்பரங்குன்றம் கோவில்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் கருவறையில் முருகப்பெருமான் சாந்தமாக அமர்ந்த நிலையில் தெய்வானையை திருமணம் செய்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆகவே இங்கு திருமணம் செய்யவே பெரும்பாலான பக்தர்கள் விரும்புகிறார்கள்.
 இதனையொட்டி முகூர்த்த நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் வைகாசி மாதத்தின் முதல்நாளிலே முதல் முகூர்த்தம் அமைந்தது. 

80 ஜோடிகளுக்கு திருமணம்

எனவே கோவிலுக்குள் திருமணம் செய்ய 50 ஜோடிகளுக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி 50 ஜோடிகளுக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் நகர் பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபங்களில் 30 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. அவர்கள் திருமணம் முடிந்ததும் கோவிலுக்குள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதனையொட்டி நேற்று ஒரே நாளில் 80 ஜோடிகளுக்கும் திருமணம் நடந்தது. 80 ஜோடிகளும், அவரது உறவினர்களும் கோவிலுக்குள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.

Next Story