வேடசந்தூர் மாரியம்மன் கோவிலில் மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம்


வேடசந்தூர் மாரியம்மன் கோவிலில் மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம்
x
தினத்தந்தி 16 May 2022 1:05 AM IST (Updated: 16 May 2022 1:05 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

வேடசந்தூர்:
வேடசந்தூர் கடைவீதியில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத பிறப்பையொட்டி நேற்று காலை கோவிலில் கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, துர்கா ஹோமம் நடந்தது.
இதைத்தொடர்ந்து உலக நன்மை, விவசாயம் செழிக்க வேண்டியும், கொரோனா பரவாமல் இருக்கவும் சிறப்பு யாகம் நடந்தது.
இதையடுத்து மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story