சதுரகிரி கோவிலில் சிறப்பு வழிபாடு


சதுரகிரி கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 16 May 2022 1:23 AM IST (Updated: 16 May 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

வைகாசி மாத பவுர்ணமியையொட்டி சதுரகிரி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வத்திராயிருப்பு, 
வைகாசி மாத பவுர்ணமியையொட்டி சதுரகிரி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
சுந்தரமகாலிங்கம் கோவில்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த  கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில் நேற்று வைகாசி மாத பவுர்ணமியைெயாட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். 
சிறப்பு வழிபாடு 
 காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு மாலை 4.30 மணியில் இருந்து 6 மணி வரை பால், பழம், இளநீர், சந்தனம் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சுவாமிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  இந்த சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story