செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் சிறுமி தற்கொலை


செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் சிறுமி தற்கொலை
x
தினத்தந்தி 16 May 2022 1:26 AM IST (Updated: 16 May 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.

ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே உள்ள கங்கர் செவல் கிராமத்தில் வசித்து வருபவர் கார்த்திகைகுமார். இவருடைய மகள் நந்தினி(வயது 17). இவர் இரவு நேரத்தில் செல்போனில் பேசிக்கொண்டு இருந்து உள்ளார். இதனை நந்தினியின் தாயார் கருப்பாயி கண்டித்ததோடு செல்போனையும் பிடுங்கி வைத்து கொண்டார் இதனால் மனவேதனை அடைந்த நந்தினி விஷம் குடித்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கல்லமநாயக்கர்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது பரிதாபமாக இறந்தார். ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story