போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை திருடியவர் சிக்கினார்


போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை  திருடியவர் சிக்கினார்
x
தினத்தந்தி 16 May 2022 1:38 AM IST (Updated: 16 May 2022 1:38 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை திருடிய ஆசாமி பிடிபட்டார்.

திருமங்கலம்,

போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை திருடிய ஆசாமி பிடிபட்டார்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 35). திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நண்பர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். மண்டப வாசலில் தனது ேமாட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கல்யாணத்திற்கு ராமச்சந்திரன் சென்றார். 
சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது அவர் நிறுத்தி இருந்த இடத்தில் மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம்பக்கம் தேடியபோது கள்ளச்சாவி போட்டு போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை திருடிய ஒரு வாலிபர் அதை தள்ளிக் கொண்டு சென்றுள்ளார். 

வாலிபர் கைது

உடனடியாக சுதாரித்த ராமச்சந்திரன் அந்த வாலிபரை மடக்கி மோட்டார் சைக்கிளை மீட்டு தான் பணிபுரியும் டவுன் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள புதுபட்டியைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 21). என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து மோட்டார் சைக்கிளை கைப்பற்றி திருமங்கலம் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story