அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி


அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
x
தினத்தந்தி 16 May 2022 1:40 AM IST (Updated: 16 May 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி பெரம்பலூரில் நடைபெற்றது.

பெரம்பலூர், 
பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட புதுநடுவலூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய புகைப்படங்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. இந்த புகைப்பட கண்காட்சியினை 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். அப்போது அவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Next Story