ஆசிரியர்கள் போராட்டம்


ஆசிரியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 May 2022 8:14 PM GMT (Updated: 15 May 2022 8:14 PM GMT)

குருவிகுளத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

திருவேங்கடம்:
குருவிகுளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் அய்யப்பசாமி தலைமை தாங்கினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. வட்டார செயலாளர் மணிபாரதி, பொருளாளர் வனிதா, மாநில பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி உள்பட திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story