தென்னை, மா மரங்களை சேதப்படுத்திய யானைகள்


தென்னை, மா மரங்களை சேதப்படுத்திய யானைகள்
x
தினத்தந்தி 16 May 2022 1:47 AM IST (Updated: 16 May 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே தென்னை, மா மரங்களை யானைகள் சேதப்படுத்தியது.

ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே தென்னை, மா மரங்களை யானைகள் சேதப்படுத்தியது. 
தென்னை சாகுபடி 
ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள நச்சாடைபேரி கண்மாய் அருகே ராஜபாளையத்தை சேர்ந்த அய்யனார் ராஜா, ராமலட்சுமி ஆகியோரின் தென்னை மற்றும் மாந்தோப்புகள் உள்ளன.
இதை சேத்தூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் குத்தகை எடுத்து பராமரிப்பு செய்து வருகிறார். இந்நிலையில் இரு தினங்களாக மலையடிவார பகுதியில் தென்னந்தோப்பில் யானைகள் புகுந்து 6 தென்னை மரங்களை வேரோடு சாய்த்து குருத்துக்களை தின்றுள்ளது. 
நிவாரணம்
இதுகுறித்து சேத்தூர்பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் கூறியதாவது:- 
 தென்னை, மாந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறேன். ஏற்கனவே விளைச்சல் குறைந்துள்ள நிலையில் அறுவடை பருவத்தில் விளைந்த மா மரங்களில் 50-க்கும் மேற்பட்ட மா கிளைகளை யானைகள் சேதப்படுத்தி உள்ளது. எப்போதும் இல்லாமல் யானைகள் கூட்டமாக வர தொடங்கி உள்ளன. 
எனவே இதனை வனத்துறையினர் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொைக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.  

Next Story