காலை 8 மணிக்குள் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படுமா?
நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரெயில் காலை 8 மணிக்குள் தாம்பரம் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரெயில் காலை 8 மணிக்குள் தாம்பரம் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாராந்திர சிறப்பு ெரயில்
நெல்லையிலிருந்து கடந்த மாதம் 17-ந் தேதி முதல் தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில் தென் மாவட்ட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதர சிறப்பு ெரயில்களை விட 1.3 சதவீதம் கட்டணம் அதிகமாக இருந்தாலும் இந்த ெரயிலை அதிக பயணிகள் பயன்படுத்தும் நிலை உள்ளது. நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ெரயில் தென்காசி ெரயில் நிலையத்தை இரவு 8.30 மணிக்கு சென்றடைகிறது. அங்கிருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் இந்த ெரயில் விருதுநகர் ெரயில் நிலையத்தை இரவு 11.15 மணிக்கு வந்தடைகிறது.
விருதுநகரில் டீசல் என்ஜின் மாற்றுவதற்காக நிறுத்தப்படும் இந்த ெரயில் விருதுநகரில் 40 நிமிடங்கள் தாமதப்படுத்தப்பட்டு இரவு 1.20 மணியளவில் மதுரை சென்றடைகிறது. விழுப்புரம் ெரயில் நிலையத்திற்கு காலை 6.45 மணிக்கு சென்றடைய வேண்டிய நிலையில் 1 மணி நேரம் முன்னதாகவே 5.45 மணிக்கு சென்றடைகிறது. ஆனாலும் தாம்பரம் ெரயில் நிலையத்திற்கு காலை 9.15 மணிக்கு தான் சென்றடைகிறது.
கால அட்டவணை
இந்த சிறப்பு ெரயில் காலை 9.15 மணிக்கு தாம்பரம் சென்றடைவதால் மாணவ-மாணவிகள், வணிகர்கள் மற்றும் அரசு பணிகளுக்கு செல்வோர் மிகுந்த சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. வழக்கமாக இதர எக்ஸ்பிரஸ் ெரயில்கள் தாம்பரம் சென்றடைய 10.50 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் நிலையில் இந்த வாராந்திர சிறப்பு ெரயில் தாம்பரம் சென்றடைய 12 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.
எனவே தென்னக ெரயில்வே நிர்வாகம் இந்த ெரயிலில் பயணம் செய்யும் பயணிகள் பயனடையும் வகையில் இந்த சிறப்பு ெரயிலை காலை 8 மணிக்குள் தாம்பரம் சென்றடையும் வகையில் கால அட்டவணையை மாற்றி உதவ வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story