மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்க தேர்வு முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்க தேர்வு முகாம்
x
தினத்தந்தி 16 May 2022 2:35 AM IST (Updated: 16 May 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி-இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்க தேர்வு முகாம் அரியலூரில் 19-ந்தேதி நடக்கிறது.

அரியலூர், 
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் தசை சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் இரு கால்கள் பாதிக்கப்பட்டு, இரு கைகள் நல்ல நிலையில் உள்ளோர் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பணிச்சான்று (கல்லூரி பயில்பவராயின் படிப்பு சான்று, சுயத்தொழில் புரிபவராயின் சுயத்தொழில் புரிவதற்கான சான்று) மார்பளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 17-ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வருகிற 19-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் பயனாளிகள் தேர்வு முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04329-228840 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Next Story