காலேன அக்ரஹாரா ஏரியை நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்


காலேன அக்ரஹாரா ஏரியை நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 16 May 2022 2:59 AM IST (Updated: 16 May 2022 2:59 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ரூ.3 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் நடைபெற்ற காலேன அக்ரஹாரா ஏரியை நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.

பெங்களூரு:

ஏரியில் வளர்ச்சி பணிகள்

  பெங்களூரு மாநகராட்சி பொம்மனஹள்ளி மண்டலத்தில் உள்ள பேகூர் வார்டில் காலேன அக்ரஹாரா கிராமத்தில் காலேன அக்ரஹாரா ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி 7 ஏக்கர் 30 குண்டேயில் அமைந்திருக்கிறது. இந்த ஏரியை புனரமைத்து, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் கடந்த 2018-19-ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.3 கோடி நிதி உதவியை அளித்திருந்தது.

  இதையடுத்து, அந்த ஏரியை சுற்றி வேலி அமைத்தல், கழிவு நீரை சுத்தப்படுத்தல், ஏரி முழுவதையும் தூய்மை படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் நடைபயணம் மேற்கொள்ள நடைபாதை அமைத்தல், இருக்கைகள் அமைத்தல், கழிவுநீரை சுத்தம் செய்யும் மையம் உள்ளிட்டவையும் ஏரியில் அமைக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்

  இந்த நிலையில், காலேன அக்ரஹாரா ஏரிக்கு நேற்று காலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சென்றார். பின்னர் அவர், ஏரியில் ஒரு செடியை நட்டு வைத்தார். அதன்பிறகு, ஏரியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். அத்துடன் ஏரியில் இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம், அவர் கேட்டு தெரிந்து கொண்டார்.

  மற்ற பணிகளை விரைந்து முடிக்கும்படியும் அதிகாரிகளுக்கு, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சந்தர்ப்பத்தில் பொம்மனஹள்ளி மண்டல மாநகராட்சி இணை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தார்.

Next Story