மகன், மகளை கொன்று தூக்குப்போட்டு பெண் தற்கொலை
சிவமொக்காவில் மகன், மகளை கொன்று பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு:
சிவமொக்கா (மாவட்டம்) தாலுகா கும்சி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சிவமூர்த்தி(வயது 28). இவரது மனைவி ஜோதி(23). இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்களும், ஒரு மகனும் மொத்தம் இவர்களுக்கு 3 குழந்தைகள். இதில் நேற்று காலையில் இவர்களது மூத்த மகள் தனது பாட்டியுடன் வெளியே சென்றுவிட்டாள்.
ஜோதி வீட்டில் தனது இளைய மகள் சான்வி(3), மகன் குஷால்(1) ஆகியோருடன் இருந்தார். அப்போது திடீரென அவர் தனது மகன் மற்றும் மகளை தூக்கிட்டு கொன்று, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி கும்சி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story