மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு: பிளேடால் கழுத்தை அறுத்து பெயிண்டர் தற்கொலை முயற்சி


மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு: பிளேடால் கழுத்தை அறுத்து பெயிண்டர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 16 May 2022 3:17 AM IST (Updated: 16 May 2022 3:17 AM IST)
t-max-icont-min-icon

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் பிளேடால் கழுத்தை அறுத்து பெயிண்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம்:

சேலம் குகை பஞ்சதாங்கி ஏரி பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 27), பெயிண்டர். இவருடைய மனைவி சண்முகப்பிரியா. இவர் கடந்த ஒரு ஆண்டாக கருத்து வேறுபாடு காரணமாக மோகனை பிரிந்து தாயார் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மோகன், தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வர மறுத்துவிட்டதால் மோகன் மனவேதனையில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த அவர் தனது கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து மோகனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story