ஈரோட்டில் வ.உ.சி. சிறுவர் பூங்காவில் குவிந்த மக்கள்


ஈரோட்டில் வ.உ.சி. சிறுவர் பூங்காவில் குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 16 May 2022 3:23 AM IST (Updated: 16 May 2022 3:23 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் வ.உ.சி. சிறுவர் பூங்காவில் மக்கள் குவிந்தனா்.

ஈரோடு
ஈரோட்டில் பொழுதுபோக்கு தலமாக வ.உ.சி. சிறுவர் பூங்கா உள்ளது. அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு புனரமைப்பு பணிகள் நடந்தன. புதிய விளையாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் பலர் தங்களது குழந்தைகளை அழைத்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், வ.உ.சி. சிறுவர் பூங்காவில் பொதுமக்கள் பலர் திரண்டனர்.
அவர்கள் தங்களது குழந்தைகளை விளையாட வைத்து மகிழ்ந்தனர். ஊஞ்சல், சீசா போன்ற விளையாட்டு உபகரணங்களில் சிறுவர்-சிறுமிகள் ஆர்வமாக விளையாடினார்கள். வயதானவர்களும் நடைபயிற்சி மேற்கொண்டும், மரத்துக்கு அடியில் அமர்ந்து நண்பர்கள், குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசியும் பொழுதை கழித்தனர்.

Next Story