தமிழகத்தில் மின்வெட்டு இல்லை- அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு
நாடு முழுவதும் நிலக்கரி பற்றாகுறை இருந்தும் தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.
கோவை
நாடு முழுவதும் நிலக்கரி பற்றாகுறை இருந்தும் தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.
தி.மு.க. பயிலரங்கம்
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல்தான் தேசிய மாடல் என்ற தலைப்பில் பயிரலங்கம் கோவையில் நடந்தது. இதில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் முன்னிலை வகித்து பேசினார். தொடர்ந்து நிகழ்ச்சிக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திராவிடம் ஒரு கோட்பாடு அல்ல. அது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமைத்தனத்தை நம்மீது திணித்தவர்களிடம் இருந்து நம்மை மீட்க வந்த ஆயுதமாக இந்த திராவிட மாடல் தற்போது விளங்கி வருகிறது.
மனிதனை மனிதனாக நடத்துவதுதான் திராவிட மாடல். சுயமரியாதைதான் திராவிட மாடல். சிலபேர் குஜராத் மாடல் என்கிறார்கள். அங்கு தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அறிவிக்கப்பட்டு உள்ளதால் அவை மூடப்பட்டு வருகின்றன.
மின்வெட்டு இல்லை
ஆனால் திராவிட மாடலில் தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் தமிழகத்தில் எந்த ஒரு மின்நுகர்வோருக்கும் மின்வெட்டு இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை இருந்தாலும், தமிழகத்தில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஓரிரு நாட்கள் மின்தடை இருந்தது. மத்திய தொகுப்பில் இருந்து வழங்கக்கூடிய மின்சாரம் தடைபட்டதால்தான் அந்த மின்தடை ஏற்பட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக 3 நாட்களில் அது சரிசெய்யப்பட்டு தற்போது மின்சாரத்தில் உபரி ஏற்பட்டு பிற மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய அளவில் நாம் உள்ளோம். தற்போது தமிழகத்தில் மின்வெட்டு இல்லை அதுதான் திராவிட மாடல்.
நாம் ஒரு ரூபாய் வரி செலுத்தினோம் என்றால் நமக்கு மத்திய அரசு 35 பைசாதான் திருப்பி கொடுக்கிறது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், நமது மாநில முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான ஆட்சியை பார்த்து பாராட்டி வருகிறார்கள்.
அதுதான் திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து ஆ.ராசா எம்.பி. சிறப்பு அழைப்பாளரான கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கலந்து கொண்டவர்கள்
பெண்களை வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று சொன்னது ஆரியம். ஆனால் அந்த பெண்களை படிக்க வசதி செய்து கொடுத்து அவர்களை வெளியே வர வைத்தது திராவிட மாடல். அம்பேத்கரின் கனவை ஆரிய மாடல் தோற்கடித்தது.
பெண்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்டி அம்பேத்கரின் கனவை நிறைவேற்றியது திராவிடம். ஆரியம் படிக்கக்கூடாது, வேலைக்கு செல்லக்கூடாது என்று கூறி தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்கி வைத்தது. ஆனால் அவர்களுக்கு சலுகைகள் வழங்கி அவர்களை படிக்க வைத்து நாகரிகம் உள்ள மனிதர்களாக மாற்றியதுதான் திராவிடம்.
நன்மைகள், வசதிகள் பெருமைகள் வேண்டும் என்று யார் ஆசைப்படுகிறார்களோ, அப்படிப்பட்டவர்களுக்கு அவைகள் கிடைக்க வேண்டும் என்று பாடுபடுவதுதான் நாகரிகம் என்று பெரியார் கூறினார். அதுதான் திராவிட மாடல். இதை அழிப்பது ஆரியம். எனவே ஆரியத்தை ஒழித்து, திராவிடத்தை வளர்க்கக்கூடிய பாதையில் நாம் அனைவரும் பயணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story