வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
சூலூரில் வீட்டின் கதவை உடைத்து நகை திருடப்பட்டது.
கருமத்தம்பட்டி
கோவையை அடுத்த சூலூர் குப்ப நாயக்கர் வீதியை சேர்ந்தவர் புஸ்பா (வயது 65). இவர் கடந்த 9-ந் தேதி உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்காக துடியலூர் சென்றார். பின்னர் அங்கேயே தங்கியிருந்தார்.
இந்த நிலையில் புஸ்பா வீட்டின் அருகில் வசிக்கும் சித்ரா என்பவர், அவருக்கு போன் செய்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டில் இருந்த 2 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து புஸ்பா சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் கதவை உடைத்து திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story