காமாட்சியம்மன் கோவில் பொங்கல் விழா: பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்


காமாட்சியம்மன் கோவில் பொங்கல் விழா: பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 16 May 2022 4:32 AM IST (Updated: 16 May 2022 4:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலையில் உள்ள காமாட்சியம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம் சென்றனா்.

சென்னிமலை
சென்னிமலையில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் விழா கடந்த 11-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று ஏராளமான பக்தர்கள் கர்நாடக மாநிலம் குடகு மலையில் உள்ள தலைக்காவிரிக்கு சென்று புனித நீர் மற்றும் பால் குடம் எடுத்து வந்தனர். பின்னர் பக்தர்கள் அனைவரும் தீர்த்த குடங்கள் மற்றும் பால்குடங்களுடன் சென்னிமலையில் உள்ள 4 ராஜ வீதி வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். கோவிலை சென்றடைந்ததும் அம்மனுக்கு புனிதநீர் மற்றும் பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நாளை மறுநாள் (புதன்கிழமை) மாவிளக்கு பூஜை நடக்கிறது. 
முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா வருகிற 19-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கல் வைத்து படைத்து வழிபடுகிறார்கள். 

Next Story