பணம் பறித்த வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பணம் பறித்த வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 16 May 2022 4:48 AM IST (Updated: 16 May 2022 4:48 AM IST)
t-max-icont-min-icon

பணம் பறித்த வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி:

திருச்சி உறையூர் சாலை ரோட்டில் கடந்த மாதம் 22-ந் தேதி பஸ்சுக்காக காத்திருந்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,520-ஐ பறித்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன் (வயது 22) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் மணிகண்டன் மீது பொது இடத்தில் விளையாடிக்கொண்டு இருந்த இளைஞர்களை கத்தியால் குத்தி மிரட்டல் விடுத்த வழக்கு, அடிதடி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கு உள்பட 10 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருந்தது தெரியவந்தது.

இதேபோல் கடந்த 3-ந் தேதி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. ரோட்டில் நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.950-ஐ பறித்து சென்றதாக ஹேமேஷ்வரன்(21) என்பவரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், அவர் ஜெராக்ஸ் கடை உரிமையாளரிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய வழக்கு, மதுபோதையில் நண்பரை கத்தியால் குத்திய வழக்கு, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் அரிவாளால் தாக்கிய வழக்கு உள்பட 6 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் மற்றும் ஹேமேஷ்வரன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 2 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.


Next Story