கெலமங்கலம் அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு 2 பேர் காயம்


கெலமங்கலம் அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு 2 பேர் காயம்
x
தினத்தந்தி 16 May 2022 12:27 PM IST (Updated: 16 May 2022 12:27 PM IST)
t-max-icont-min-icon

கெலமங்கலம் அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள பிதிரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர்கள் சிவக்குமார் (19), ஆஞ்சினப்பா (19). சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் தொட்டபேளூர் பிரிவு சாலை அருகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற சரக்கு வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மஞ்சுநாத் பரிதாபமாக இறந்தார். ஆஞ்சினப்பா, சிவக்குமார் ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story