அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரதி, கார்த்திகேயன், ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் மணி, சுதர்சனன் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக பணிவரன்முறை படுத்தவேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை முழுநேர பணியாளர்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story