பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிரமாக பணிபுரிய வேண்டும்


பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிரமாக பணிபுரிய வேண்டும்
x
தினத்தந்தி 16 May 2022 12:28 PM IST (Updated: 16 May 2022 12:28 PM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கான எதிரான குற்றங்களை தடுக்க தீவிரமாக பணிபுரிய வேண்டும் என்று போலீசாருக்கு, சூப்பிரண்டு கலைசெல்வன் அறிவுறுத்தினார்.

தர்மபுரி:

பெண்களுக்கான எதிரான குற்றங்களை தடுக்க தீவிரமாக பணிபுரிய வேண்டும் என்று போலீசாருக்கு, சூப்பிரண்டு கலைசெல்வன் அறிவுறுத்தினார்.

வாகனங்கள் ஆய்வு

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 25 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு பணிபுரியும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு தலா ஒரு ஜீப்பும், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு மோட்டார் சைக்கிள்களும் காவல்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர அதிரடி படை போலீசாருக்கு வேன்கள், பஸ்கள், வஜ்ரா வாகனம், மீட்பு வாகனம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக இந்த வாகனங்களை போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த வாகனங்களை ஒவ்வொரு மாதமும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நிறுத்தி ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி போலீசாருக்கு வழங்கப்பட்ட 100 வாகனங்கள் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டார். அப்போது வாகனத்தின் செயல்பாடுகள் மற்றும் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை அவர் ஆய்வு செய்தார்.

கலந்தாய்வு கூட்டம்

இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு கலைசெல்வன் தலைைம தாங்கினார். அப்போது போலீஸ் நிலையங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர் பேசுகையில், போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களின் புகார்களை முறையாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாமலை, குணசேகரன், புஷ்பராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமச்சந்திரன், பெனாசீர் பார்த்திமா, சவுந்தரராஜன், தினகரன் மற்றும் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story