நடமாடும் தக்காளி கூழாக்கும் எந்திரம்


நடமாடும் தக்காளி கூழாக்கும் எந்திரம்
x
தினத்தந்தி 16 May 2022 12:28 PM IST (Updated: 16 May 2022 12:28 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் நடமாடும் தக்காளி கூழாக்கும் எந்திரத்தை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி:
தர்மபுரியில் நடமாடும் தக்காளி கூழாக்கும் எந்திரத்தை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.
தக்காளி உற்பத்தி
தர்மபுரியில் கடகத்தூர் கூட்ரோட்டில் நடமாடும் தக்காளி கூழாக்கும் எந்திரத்தின் செயல்பாடுகள் தொடக்க விழா நடந்தது.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை - வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் திவ்யதர்ஷினி கலந்து கொண்டு நடமாடும் தக்காளி கூழாக்கும் எந்திரத்தை தொடங்கி வைத்து அதன் செயல்பாட்டினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டிற்கு சராசரியாக 2,460 எக்டர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு 58,400 மெட்ரிக் டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது.
கூழாக்கும் எந்திரம்
தக்காளி விலை வீழ்ச்சி ஏற்படும் காலங்களில் விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் வயல்களுக்கு நேரடியாக சென்று தக்காளி மதிப்பு கூட்டும் பொருட்களான தக்காளி ஜாம், கூழ், சாறு போன்றவை தயாரிப்பு செய்திட முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் தர்மபுரி மாவட்டத்திற்கு 2 நடமாடும் தக்காளி கூழாக்கும் எந்திரம் வழங்கப்பட்டது.
அவற்றில் ஒரு நடமாடும் தக்காளி கூழாக்கும் எந்திரம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மருதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு 3 வருடங்களுக்கு ஒப்பந்த வாடகைக்கு வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மற்றொரு நடமாடும் தக்காளி கூழாக்கும் எந்திரம் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
உரிய விலை
தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருவாயை அதிகரித்திடவும், அதிக அளவில் உற்பத்தியாகும்போது உரிய விலை கிடைத்திடவும், நடமாடும் தக்காளி கூழாக்கும் எந்திரத்தினை பயன்படுத்தி தக்காளிகளை மதிப்பு கூட்டுப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் அதிக இலாபம் கிடைக்கும். இதனால் தக்காளி வினாகுவதை தடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டிடலாம்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை கலெக்டரின் நேர்முக உதவியாளர் மோகன்தாஸ் சவுமியன், தாசில்தார் ராஜராஜன், தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் மாலினி, வேளாண்மை விற்பனைக்குழு செயலாலர் ரவி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சசிகலா, வேளாண்மை அலுவலர் அர்ச்சுணன், தோட்டக்கலை அலுவலர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story