சூளகிரி அருகே முதியவர் தீக்குளித்து தற்கொலை


சூளகிரி அருகே முதியவர் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 16 May 2022 12:29 PM IST (Updated: 16 May 2022 12:29 PM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சூளகிரி:
சூளகிரி அருகே உள்ள எர்ரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயப்பா (வயது 95). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் இவரது காலில் அடிபட்டது. அன்று முதல் அவதிப்பட்டு வந்த அவர், மனவேதனையில் கடந்த 13-ந் தேதி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் திம்மராயப்பா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story