அறிவியல் தொழில் நுட்ப கண்காட்சி


அறிவியல் தொழில் நுட்ப கண்காட்சி
x
தினத்தந்தி 16 May 2022 5:11 PM IST (Updated: 16 May 2022 5:11 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் அறிவியல் தொழில் நுட்ப கண்காட்சி நடந்தது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களுக்கான அறிவியல் தொழில் நுட்ப கண்காட்சி இந்திய தொழில் நுட்ப கல்விக்கான சமூகம் சார்பில் நடை பெற்றது. கல்லூரியின் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சியை தொடங்கி வைத்தார். முதல்வர் பெரியசாமி தலைமை வகித்தார். ஐ.எஸ்.டி.இ. ஒருங்கிணைப்பாளர் முருகேசுவரி முன்னிலை வகித்தார். இந்த தொழில்நுட்ப கண்காட்சியில் 3-ம் ஆண்டு மாணவர்கள் கலந்துகொண்டு 37 செய்முறை படைப்புகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கு முன்னாள் மாண வர்கள் சிபிலட்சுமி, கார்த்திகா, வல்லரசு சம்பத்குமார், விக்னேஷ்வரன் அங்குச்சாமி ஆகியோர் சிறப்புவிருந்தினர் களாக கலந்துகொண்டு ஒவ்வொரு துறையிலும் சிறந்த 3 செய்முறை படைப்புகளை தேர்வு செய்து பரிசுகளை வழங்கினர். விழா ஏற்பாடுகளை அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Next Story