தேசிய டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆலப்பாக்கம் ஊராட்சியில் தேசிய டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கம் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் பொதுச்சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய டெங்கு தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மரியபிரகாசி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் குமார், தமிழ்செல்வன், துணைத் தலைவர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சங்கர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக வட்டாரச் சுகாதார மேற்பார்வையாளர் மோகன்ராஜ், மருத்துவ அலுவலர் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நீர் தேங்கும் தொட்டிகளில் வாரத்தில் இரு முறை பிளீசிங் பவுடர் மூலம் தூய்மைச் செய்தல் வேண்டும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்கள் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும். வீடுகளில் தேங்காய் ஓடு, டயர், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்காதவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 16-ந்தேதி டெங்கு தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது, எனத் தெரிவித்தனர். பொதுமக்கள் மத்தியில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story