கோத்தகிரியில் காலி மதுபாட்டில்களை வாங்க புதிய வசதி அறிமுகம்


கோத்தகிரியில் காலி மதுபாட்டில்களை வாங்க புதிய வசதி அறிமுகம்
x
தினத்தந்தி 16 May 2022 6:56 PM IST (Updated: 16 May 2022 6:56 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் காலி மதுபாட்டில்களை வாங்க புதிய வசதியாக ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

கோத்தகிரி

கோத்தகிரியில் காலி மதுபாட்டில்களை வாங்க புதிய வசதியாக ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

கால மதுபாட்டில்கள்

நீலகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில், மது பானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு, மது பிரியர்கள் சிலர் காலி மது பாட்டில்களை சாலையோரங்களிலும், வனப் பகுதியிலும், விளை நிலங்களிலும் வீசி வருகின்றனா். இவ்வாறு வன பகுதிகளில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் வன உயிரினங்களுக்கும், பொது இடங்களில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் சுற்றுபுறமும் மாசுபட்டு நோய் தொற்று ஏற்பட காரணமாவதுடன், சுற்றுப்புறச் சூழலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு வந்தது. இதனைத் தடுக்கும் பொருட்டு நீலகிரி மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையம் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டது. 

ஸ்டிக்கா் ஒட்டப்படும் மதுபாட்டில்கள்

மேலும் முதல்கட்டமாக மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலையோரங்களில் காணப்படும் காலி மதுபாட்டில்களைச் சேகரித்து அகற்றும் பணி கடந்த 11-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து மதுபானங்களின் காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மீண்டும் கொடுத்து ரூ.10 ஐ வாடிக்கையாளா்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நேற்று முன்தினம் முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபான பாட்டில்களின் மேலும் டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 பெறப்படும் என்ற ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. மேலும் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் திட்டமும் தொடங்கியது. இதற்கிடையே அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து மதுபான பாட்டில்கள் மீது டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படும் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா? என டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Next Story