தொடர் மழையால் முதுமலையில் தடுப்பணைகள் நிரம்பின
தொடர் மழையால் முதுமலை வனத்தில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
கூடலூர்
தொடர் மழையால் முதுமலை வனத்தில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
தொடர் மழை
ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் கூடலூர், முதுமலை உள்ளிட்ட வனப்பகுதியில் வறட்சி நிலவுவது வழக்கம். இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து வனவிலங்குகள் இடம் பெயர்ந்து விடுகிறது. கடந்த மாதம் முதுமலை, மசினகுடி வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவியது.
இதன் காரணமாக வனவிலங்குகளின் தாகத்தைத் தணிப்பதற்காக டேங்கர் லாரிகளில் தண்ணீரை நிரப்பி வனப்பகுதியில் உள்ள தரைத்தள சிமெண்டு தொட்டிகளில் வனத்துறையினர் ஊற்றி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக கூடலூர், முதுமலை சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வறட்சி நீங்கி வனப்பகுதி பசுமையாக காணப்படுகிறது.
தடுப்பணைகள் நிரம்பியது
இதேபோல் முதுமலையில் உள்ள அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி வழிகிறது. இதனால் வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-கடந்த 2 ஆண்டுகளாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்து இருந்தது. இதனால் காட்டு தீ பரவல் உள்ளிட்ட பிரச்சினை எழ வில்லை. நடப்பாண்டில் இதுவரை இல்லாத வகையில் கோடை வறட்சியை போக்கும் வகையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் முதுமலையில் தடுப்பு அணைகள் நிரம்பி விட்டது. மேலும் பசுமையாக மாறிவிட்டதால் வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது. இன்னும் 2 வாரங்களில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கிவிடும். இதனால் இனி வரும் நாட்களில் வறட்சி ஏற்பட வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story