ஓவேலிக்கு கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல தடை: அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


ஓவேலிக்கு கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல தடை: அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 May 2022 7:15 PM IST (Updated: 16 May 2022 7:15 PM IST)
t-max-icont-min-icon

ஓவேலிக்கு கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல தடை அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்


கூடலூர்

கூடலூர் தாலுகா ஒவேலி பேரூராட்சியில் குடியிருக்கும் மக்கள் கட்டுமான மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கான தடையை நீக்க வேண்டும். அனைத்து குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1,000, சமையல் எரிவாயு மானியம் என்ற வாக்குறுதிகளை ஓராண்டு ஆகியும் நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்தும், திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் இங்கு நிலவும் செக்சன்- 17 ன் பிரிவில் குடியிருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு, பட்டா வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கூடலூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூடலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பத்மநாதன் தலைமை தாங்கினார். கூடலூர் பொன்.ஜெயசீலன் எம்.எல்.ஏ. உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story