இந்து தேசிய கட்சியினர் 15 பேர் கைது


இந்து தேசிய கட்சியினர் 15 பேர் கைது
x
தினத்தந்தி 16 May 2022 8:49 PM IST (Updated: 16 May 2022 8:49 PM IST)
t-max-icont-min-icon

இந்து தேசிய கட்சியினர் 15 பேர் கைது

திருப்பூர்
இந்து மதத்தையும், தில்லை நடராஜரையும் இழிவுபடுத்தி யூடியூப்பில் வெளியிட்ட நபரை கைது செய்யக்கோரி இந்து தேசிய கட்சி சார்பில்  போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றுகாலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் இந்து மக்கள் தேசிய கட்சி மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமையில், துணைத்தலைவர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக வந்து, இந்து மதத்தை இழிவுபடுத்தியவர்களை கைது செய்யக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். அதற்குள் அங்கிருந்த தெற்கு போலீசார் 15 பேரை கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story