தூத்துக்குடி அருகே விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் சாவு
தூத்துக்குடி அருகே கன்டெய்னர் லாரியின் பின்பகுதியில் கார் மோதிய விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி அருகே கன்டெய்னர் லாரியின் பின்பகுதியில் கார் மோதிய விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
டிராவல்ஸ் உரிமையாளர்
தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் நடுவகுறிச்சி கிராமத்தை சேர்ந்த சற்குணம் மகன் அந்தோணி சார்லஸ் (வயது 37). டிராவல்ஸ் உரிமையாளர். இவர் நேற்று மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.
புதூர்பாண்டியாபுரம் டோல்கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக திருப்பூரில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்திலேயே சாவு
இதில் காரை ஓட்டிச் சென்ற அந்தோணி சார்லஸ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீசார் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் கோமதி விநாயகத்தை (41) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக புதியம்புத்தூர் டோல்கேட் அருகே சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story