பழுதடைந்த மின்சாதனங்கள் சேகரிப்பு


பழுதடைந்த  மின்சாதனங்கள் சேகரிப்பு
x

பழுதடைந்த மின்சாதனங்கள் சேகரிப்பு

உடுமலை:
உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் இருக்கும் பயன்படுத்த முடியாத மின் சாதன பொருட்களை சேகரிக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் தொடங்கியது.
பழைய மின் சாதன பொருட்கள்
உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் கடைகளில் உள்ள, பயன்படுத்த முடியாத மின் சாதன பொருட்களை சேகரிக்கநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதைத்தொடர்ந்து நகராட்சி தலைவர் மு.மத்தீன்,ஆணையாளர் பி.சத்தியநாதன் ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் இந்த பணிகளை நேற்று தொடங்கினர். நேற்று வாகனத்தில் வீதி வீதியாக சென்று இந்த பொருட்களை சேரித்தனர்.
அத்துடன் இந்த பொருட்களை சேகரிக்க உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார அலுவலகம், சர்தார் வீதியில் உள்ள சுகாதார அலுவலகம், நகராட்சி அலுவலக பழைய கட்டிடம் ஆகிய 3 இடங்களில் சேகரிப்புமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
20-ந் தேதி வரை...
வணிக நிறுவனங்கள் தங்களிடம் வைத்துள்ள பயன்படுத்த முடியாத மின் சாதன பொருட்களான மின் விளக்குகள், குளிர்சாதன பொருட்கள், செல்போன் பாகங்கள், பேட்டரிகள், தொலைக்காட்சி, மின்விசிறி, வாஷிங் மெஷின், கணினிப்பொறி பாகங்கள் ஆகியவற்றை மையங்களில் 20-ந் தேதி வரை ஒப்படைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story