இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்
இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் இருளர் இன மக்கள் மனு கொடுத்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் கருங்காலிப்பட்டு கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் மோகனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கருங்காலிப்பட்டு கிராமத்தில் இருளர் இனத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு இதுநாள் வரை இலவச மனைப்பட்டா, இலவச வீடு, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, 100 நாள் வேலைக்கான அட்டை, சாதி சான்றிதழ் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு மேற்கண்ட அரசு சலுகைகள் மற்றும் ஆவணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Related Tags :
Next Story