பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் இரு தரப்பினரிடையே மோதல்


பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் இரு தரப்பினரிடையே மோதல்
x
தினத்தந்தி 16 May 2022 9:29 PM IST (Updated: 16 May 2022 9:29 PM IST)
t-max-icont-min-icon

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் இரு தரப்பினரிடையே மோதல் தொடர்பாக 9 போ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் வைகுண்டவாசல் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 39), நகை தொழிலாளி. விழுப்புரம் கமலா நகரை சேர்ந்தவர் சரவணன் (44). பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இவர்கள் இரு தரப்பினருக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் திட்டி தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து அய்யப்பன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விழுப்புரம் விராட்டிக்குப்பத்தை சேர்ந்த உதயகுமார் (43), கமலா நகர் சரவணன், விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த தமிழ் (59) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் சரவணன் கொடுத்த புகாரின்பேரில் அனிச்சம்பாளையம் ராஜன் (47), ரெட்டியார்பாளையம் அய்யப்பன் உள்ளிட்ட 4 பேர் மீதும், அதே போலீஸ் நிலையத்தில் ராஜன் கொடுத்த புகாரின்பேரில் சரவணன், உதயகுமார் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story