குடிபோதையில் கார் ஓட்டி பொதுமக்களை பயமுறுத்திய 4 பேர் கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 16 May 2022 9:55 PM IST (Updated: 16 May 2022 9:55 PM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் கார் ஓட்டி பொதுமக்களை பயமுறுத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாக்பூர், 
குடிபோதையில் கார் ஓட்டி பொதுமக்களை பயமுறுத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 
 மதுபாட்டில்களுடன்.
நாக்பூர்-வார்தா சாலையில் ஜம்தா பகுதி அருகே இன்று போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்றில் இருந்தவர்கள் தங்கள் கையில் இருந்த மதுபாட்டிலை சாலையில் சென்ற பொதுமக்களை நோக்கி காண்பித்து, அவர்களை பயமுறுத்தும் வகையில் நடந்துகொண்டனர். 
இதைகண்ட போலீசார் அந்த காரை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் போலீசாரிடம் சிக்காமல் இருக்க காரை அவர்கள் வேகமாக செலுத்தினர். இதையடுத்து போலீசார் சிறிது தூரம் அந்த காரை பின் தொடர்ந்து துரத்தி சென்றனர். 
ஆனால் அதிவேகமாக காரை செலுத்திய மர்ம நபர்கள் போலீசாரிடம் இருந்து தப்பி சென்றனர். இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். 
 கைது
இதையடுத்து சோதனை சாவடி வழியாக வந்த அந்த காரை அங்கு காவலுக்கு இருந்த போலீசார் வழிமறித்து நிறுத்தினர். மேலும் காரில் இருந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. 
பிடிபட்டவர்களில் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் பெயர் அனிகேத் வைகோகர், யாஷ் நெர்கர் மற்றும் அனிகேத் கஜ்பியே என தெரியவந்தது. இதில் யாஷ் நெர்கர் மற்றும்  அனிகேத் வைகோகர் இருவரும் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது.

Next Story