கூடுதல் பஸ் வசதி கேட்டு சி.முட்லூர் கல்லூரி மாணவர்கள் போராட்டம்


கூடுதல் பஸ் வசதி கேட்டு சி.முட்லூர் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 May 2022 10:03 PM IST (Updated: 16 May 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

கூடுதல் பஸ் வசதி கேட்டு சி.முட்லூர் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சிதம்பரம், 

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் சிதம்பரம் அரசு கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு மாணவர்கள் குறித்த நேரத்தில் வந்து செல்வதற்கு போதிய அளவில் பஸ் வசதி இல்லை. 

இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள். சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

உள்ளிருப்பு போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் நேற்று கல்லூரியில், வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு கூடுதல் பஸ் வசதி வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பின்னர் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

Next Story