கலசபாக்கம் அருகே விவசாயிகள் சாலை மறியல்
கலசபாக்கம் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலசபாக்கம்
கலசபாக்கம் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் மோட்டூர் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் பதிவு செய்த நெல் மூட்டைகளை எடை போடாமல் தாமதப்படுத்தி வருவதாக விவசாயிகள் நெல் மூட்டைகளை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் பற்றி தகவல் அறிந்த கலசபக்கம் போலீசார் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர் கூறுகையில், கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விவசாயிகள் அதிகமானோர் பதிவு செய்துள்ள காரணத்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து நெல் மூட்டைகளை எடை போட்டு வருகிறோம்.
எடை போட சம்மதம்
போளூர் ஒன்றியத்தை சேர்ந்த விவசாயிகள் இங்கு வந்து பதிவு செய்துள்ள காரணத்தால் எடை போடுவதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
பின்னர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போளூர் பகுதி விவசாயிகள் நெல் மூட்டைகளையும் எடை போட சம்மதித்தனர். அதன்பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story