சிறுவனுக்கு பாலியல் தொல்லை: கேரள வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்


சிறுவனுக்கு பாலியல் தொல்லை: கேரள வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
x
தினத்தந்தி 16 May 2022 10:19 PM IST (Updated: 16 May 2022 10:19 PM IST)
t-max-icont-min-icon

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேரள வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேரள வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


மங்களூரு:

பாலியல் தொல்லை

  தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா சம்பியா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். அந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறான். சிறுவன் வீட்டின் அருகில் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நெக்ரஜே பகுதியை சேர்ந்த ஸ்ரீஜீத் (வயது 27) என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். மேலும், அவர் அந்த பகுதியில் கூலித்தொழில் செய்து வந்தார்.

  இந்த நிலையில் கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந் தேதி ஸ்ரீஜீத் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த 17 வயது சிறுவனை அழைத்து வீட்டின் கதவை பூட்டிவிட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மேலும், இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என கூறி மிரட்டியுள்ளார்.

15 நாட்கள் காவல்

  இதனால் பயந்து போன சிறுவன் இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளான். உடனே இதுகுறித்து புத்தூர் புறநகர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஸ்ரீஜீத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

  இந்த வழக்கை விசாரித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது நிருபிக்கப்பட்டதால், வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தார். இதையடுத்து புத்தூர் புறநகர் போலீசார் வாலிபரை சிறையில் அடைத்தனர்.

Next Story