வீட்டின் சுவர் சரிந்துவிழுந்து தொழிலாளி படுகாயம்


வீட்டின் சுவர் சரிந்துவிழுந்து தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 16 May 2022 10:27 PM IST (Updated: 16 May 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் வீட்டின் சுவர் சரிந்துவிழுந்து தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

குடியாத்தம்

குடியாத்தம் செதுக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினகரன் (வயது 45) கூலித் தொழிலாளி. குடிசை வீட்டில் வசித்து வருகிறார். தொடர் மழையால் நனைந்து இருந்த இவரது வீட்டின் சுவர் திடீரென சாய்ந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த தினகரன்

 சிக்கிக்கொண்டார். அவரது அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர் மேலும் இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த நகரமன்ற உறுப்பினர் ம.மனோஜ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தினகரனை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சுவர் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story