வீட்டின் பூட்டை உடைத்து 5½ பவுன் நகை திருட்டு
மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5½ பவுன் நகை திருட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ராஜூ (வயது 48). கார் டிரைவர். இவருடைய மனைவி பிரியா. இவர் நீடூரில் உள்ள தனியார் கல்லூரியில் துணை முதல்வராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ராஜூ காலையில் வழக்கம்போல் தனது வீட்டை பூட்டிவிட்டு மயிலாடுதுறைக்கு சென்றுள்ளார். பின்னர் பணிகளை முடித்துவிட்டு மதியம் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த வளையல், செயின், ஆரம் உள்ளிட்ட 5½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசிதேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story