தவறி விழுந்த 2 பவுன் சங்கிலி மீட்பு


தவறி விழுந்த 2 பவுன் சங்கிலி மீட்பு
x
தினத்தந்தி 16 May 2022 10:37 PM IST (Updated: 16 May 2022 10:37 PM IST)
t-max-icont-min-icon

கும்பக்கரை அருவியில் குளித்தபோது பெண்ணின் கழுத்தில் இருந்து தவறி விழுந்த 2 பவுன் சங்கிலியை வனத்துறையினர் மீட்டனர்.

பெரியகுளம்: 

தேனியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி லாவண்யா. ராஜ்குமார் குடும்பத்துடன் நேற்று  மாலை கும்பக்கரை அருவிக்கு வந்தார். அங்கு அவர்கள் அருவியில் குளித்தனர். அப்போது லாவண்யா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி தவறி அருவி தண்ணீரில் விழுந்தது. உடனே இதுகுறித்து லாவண்யா வனத்துறையினரிடம் தெரிவித்தார். அவர்கள் அருவியில் சங்கிலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

பின்னர் இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.  இன்று காலையில் அருவியில் சங்கிலியை தேடும் பணி மீண்டும் தொடங்கியது. அங்கு ஒரு பள்ளத்தில் கிடந்த தங்க சங்கிலியை மீட்டு லாவண்யாவிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். 


Next Story