தீயணைப்பு வீரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 16 May 2022 10:47 PM IST (Updated: 16 May 2022 10:47 PM IST)
t-max-icont-min-icon

வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நொய்யல், 
தற்கொலை
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணியாற்றி வருபவர் கலைச்செல்வன் (வயது 45). இவரது மனைவி புவனேஸ்வரி (37). இவர்களுக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிறது. இவர்கள் தீயணைப்புநிலைய குடியிருப்பு வளாகத்தில் குடியிருந்து வருகின்றனர்.       
இந்நிலையில் அதிகாலை புவனேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டுக்குள் இருந்த ஜன்னல் கம்பியில் தூக்குப் போட்டு கொண்டார். இதைக்கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புவனேஸ்வரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசர் வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.        
 மேலும் புவனேஸ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு வீரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story