நாகை கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தர்ணா


நாகை கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தர்ணா
x
தினத்தந்தி 17 May 2022 12:00 AM IST (Updated: 16 May 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

குடியிருந்து வரும் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாகப்பட்டினம்:
குடியிருந்து வரும் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தர்ணா போராட்டம்
வேதாரண்யம் தாலுகா தெற்கு தேத்தாக்குடி பகுதியை சேர்ந்த காளிமுத்து மனைவி இன்பவள்ளி (வயது 70). இவர் நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்தார். 
தொடர்ந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கையில் பதாகையுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் இன்பவள்ளியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலெக்டர் அருண் தம்புராஜிடம் அவரை அழைத்துச் சென்றனர். கலெக்டரிடம் இன்பவள்ளி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தாக்குதல்
நானும் எனது கணவர் காளிமுத்துவும் பல ஆண்டுகளாக ேவதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வரி செலுத்தி குடியிருந்து வருகிறோம்.  இந்த நிலையில் தோப்புத்துறையை சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் வந்து நாங்கள் குடியிருக்கும் இடத்தை வாங்கி விட்டதாக கூறி எங்களை அங்கிருந்து காலி செய்யும்படி மிரட்டல் விடுத்து என்னையும், எனது கணவரையும் தாக்கினர்.
நடவடிக்கை
இதுகுறித்து வேதாரண்யம் போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நாங்கள் குடியிருந்து வரும் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதை தொடர்ந்து அந்த மூதாட்டி  அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story