தேனி-போடி அகல ரெயில் பாதை பணிகளை ரவீந்திரநாத் எம்.பி. ஆய்வு


தேனி-போடி அகல ரெயில் பாதை பணிகளை ரவீந்திரநாத் எம்.பி. ஆய்வு
x
தினத்தந்தி 16 May 2022 11:02 PM IST (Updated: 16 May 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

தேனி-போடி அகல ரெயில் பாதை பணிகளை ரவீந்திரநாத் எம்.பி. ஆய்வு செய்தார்.

போடி: 

மதுரை-போடி அகல ரெயில் பாதை திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மதுரையிலிருந்து ஆண்டிப்பட்டி வரை பணிகள் முடிந்து ரெயில் இயக்கப்பட்டது. இதில் தேனி வரை ரெயில் பாதை பணிகள் நிறைவு பெற்றது. தற்போது தேனியில் இருந்து போடி வரை சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் உள்ள 
ரெ
யில் பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில்  போடியில் நடைபெறும் அகல ரெயில் பாதை பணிகளை ரவீந்திரநாத் எம்.பி. ஆய்வு செய்தார். அப்போது வெண்ணிமலை தோப்பு, சுப்புராஜ் நகர் பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் சுப்புராஜ் நகரையும், வெண்ணிமலை தோப்பு சாலையையும் இணைக்கும் இடத்தில் 
ரெ
யில்வே சுரங்க பாதை அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் திட்டம் நிறைவேற்றப்படும். மேம்பாலம்‌ அமைக்கப்பட்டால் வீடுகளை இழக்கும் மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய நகராட்சி நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார். ஆய்வின்போது ரெயில்வே கட்டுமான செயற்பொறியாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story