கன மழை காரணமாக பயிர்கள் சேதம்
நாயக்கனேரி மலை ஊராட்சியில் கன மழை காரணமாக பயிர்கள் சேதம் அடைந்தன.
ஆம்பூர்
ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை ஊராட்சியில் மலை கிராமங்களில் கன மழை காரணமாக கானாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியில் உள்ள ஆனை மடுகு தடுப்பணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
நாயக்கனேரி மலை கிராமத்தில் கடந்த இரு நாட்களாக பெய்த கன மழை காரணமாக சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூக்கள், கேழ்வரகு, காய்கறிகள், நெற் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. அதனால் பயிர்கள் அழுகி சேதமடையும் சூழ்நிலை நிலவுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வருவாய் துறை, வேளாண்மை துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story